Daryl மற்றும் Devon அதிரடி ஆட்டம்| இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
உலகக்கிண்ண T20 போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக நுழைந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்தாடி வெற்றியை பதிவு செய்து இறதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் களமிறங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி , இருபது ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை குவித்தது.
167 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட துவங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்த போதும், Daryl Mitchell மற்றும் Devon Convey யின் நின்று நிலைத்த அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை 19வது ஓவர்கள் நிறைவிலேயே கடந்து வெற்றிபெற்றது.
இதன்படி நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வரும் ஞாயிறன்று டுபாயில் மோதவுள்ளது.
இன்றைய அரையிறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடி ஆட்ட வீரன் Daryl Mitchell தெரிவாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.