மனிதர்களைக் கண்காணித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே கொவிட் 19 தயாரிக்கப்பட்டிருக்கிறது!

வடக்கு மசடோனிய மக்களில் மூன்றிலிரண்டு பங்கினரின் நம்பிக்கை, கொவிட் 19 கிருமிகள் பரிசோதனைக்கூடங்களில் தயாரிக்கப்பட்டு மக்கள் மீது ஏவப்பட்டிருக்கின்றது என்பதாகும். சர்வதேச ரீதியில் ஜனநாயக அரசியல் பற்றி ஆய்வுகள் நடத்தும் அமைப்பொன்றினால் வடக்கு மசடோனிய மக்களியே நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டிலேயே இவ்விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

கொவிட் 19 கிருமிகள் பரிசோதனைக்கூடத்தில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டன என்று 65 % பேர் நம்புகிறார்கள்.

அக்கிருமிகளை விமானங்களுக்குள் தூவிவிட்டுப் பரவவிட்டிருக்கிறார்கள் என்று 46 % பேர் நம்புகிறார்கள்.

சில சக்திமிக்க குடும்பங்களில் கையில்தான் உலக நாடுகளின் கட்டுப்பாடு இருக்கிறதென்று 72 % நம்புகிறார்கள்.

காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகப் பொய்களே புனையப்படிருப்பதாக நம்புகிறவர்கள் 29 % மக்கள்.

காலநில மாற்ற விபரங்கள் சில செயற்கைக்கோள்களினால் இயக்கப்பட்டு வருகின்றன என்று நம்புகிறவர்கள் 46 % மக்கள்.

நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சுக்கு யாரோ பணம் கொடுத்து கொவிட் 19 பற்றிய புள்ளிவிபரங்களை ஊதிப் பெரிதாக்கும்படி செய்திருக்கிறார்கள் என்பவர்கள் 44 %.

ஐரோப்பிய நாடான வட மசடோனியாவில் இதுவரை சுமார் 38 % மக்களே இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் அத்தொகை சராசரியாக 68 % ஆகும்.

அந்த நாட்டு மக்களில் இப்படியான கற்பனை நம்பிக்கைகளுக்கான காரணம் நாட்டு அரசியல்வாதிகள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லாமலிருப்பது, பொதுச் சேவையினரின் மீது நல்ல எண்ணம் இல்லாமலிருப்பதுமே என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்