கஷோக்கி படுகொலை தொடர்பாக பாரிஸில் கைதான நபர் விடுவிப்பு. பெயர் குழப்பமே கைதுக்கு காரணம்
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி படுகொலையில் தொடர்புடையவர்என்ற சந்தேகத்தில் பாரிஸ் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டசவுதிப் பிரஜை விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப் படைப்பிரிவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் Khaled al-Otaibi என்பவர் பாரிஸ் விமான நிலையத்தில்இரண்டொரு தினங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டிருந்தார். துருக்கி அரசு விடுத்திருக்கும் சர்வதேசக் கைது உத்தரவின் கீழேயே அவரைப் பாரிஸ் அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.
ஆனால் கைதான நபர் தேடப்படுகின்றKhaled al-Otaibi அல்லர் என்றும் அதே பெயரைக் கொண்ட மற்றொரு சவுதிப்பிரஜை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பாரிஸ் சட்டமா அதிபர்அலுவலகம் தெரிவித்துள்ளது.Khaled al-Otaibi என்ற பெயருடைய கடவுச்சீட்டை வைத்திருந்ததன் காரணமாகவேஅவர் பொலீஸாரிடம் சிக்க நேர்ந்துள்ளது.தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இதேவேளை, கைதானவர் கொலையில் தொடர்புடைய நபர் அல்லர் என்பதை பாரிஸில் உள்ள சவுதி அரேபியத் தூதரகமும் உறுதிப்படுத்தி உள்ளது. உண்மையான Khaled al-Otaibi சவுதி அரேபியாவின் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கிறார். Khaled al-Otaibi என்னும் பெயரில் நூற்றுக் கணக்கான சவுதி பிரஜைகள் உள்ளனர்என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.