கடலூர்
அஞ்சலையம்மாள்
1890 கடலூர்
ஈன்றெடுத்த வீரத்திருமங்கை அஞ்சலையம்மாள்
உப்புக்கும்
வரி விதித்த
வெள்ளையன் ஆட்சியில்
காந்தியின் அழைப்பை ஏற்று
உப்பு எடுத்தவரே
அஞ்சலையம்மாள் !
1934 ல் காந்தியடிகளை வரவேற்க தடை விதித்த போது
இஸ்லாமிய உடையில்
கைவண்டி வைத்து
இழுத்து சென்ற
அஞ்சலையை கண்டு
வியந்த காந்தி
“தென்னாட்டு ஜான்சிராணியென்று
புகழாரம் சூட்டி
மகிழ்ந்தார் .
சிறையில் பட்ட சித்ரவதைகள்
ஏராளம் !
பரோலில் வந்து
மகப் பேறு பெற்ற
மகாராணி அஞ்சலை மட்டும் தானே ….!
மகப்பேறு பெற்றிட
மன்னிப்பு கடிதம் கேட்டபோது
மறுத்துப் பேசி
பட்ட வேதனைகள்
எத்தனை எத்தனையோ !
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகி
ஒன்பது முறை ஆறரை ஆண்டு
சிறையில்…..!
கல்லுடைத்து தனிமையில்
வாடிய போதும்
மனம் தளரா
பெண்மணி அஞ்சலையம்மாள் !
இந்திய விடுதலைக்குப் பின்
அரசியலை விட்டு
கிராமத்தை மேம் படுத்த
நன் முனைப்பெடுத்தார் …!
எழுச்சி நிறை
பெண்மணியை போற்றுவோம் ….!
புரட்சி பணிதனை
ஏற்றுவோம் ….!
எழுதுவது : கவிச்செம்மல்.
பி.ஆரோக்கிய செல்வி ,
கடலூர் .