பிரான்சில் இரயில்வே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றன தொழிற்சங்கங்கள்| பயணிகள் நிம்மதி !!!


பிரான்சில் வழமை போல் , நத்தார் விடுமுறை காலங்களில்,இந்தவருடமும் தங்களின் வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள், இந்தவருடமும் அறிவித்து பின்னர் வாவஸ் பெற்றுக்கொண்டன. தொழிற்சங்கம் சார்ந்த பல கோரிக்கைகளை அரசங்காத்திற்கு நோக்கி முன் வைத்தே , பிரன்ச் இரயில்வே கழகத்தின் (எஸ் என் சீ எஃப்)  பெரும்பான்மையான தொழிற்ச் சங்கள் பொது வேலை நிறுத்ததை அறிவித்திருந்தன.

இந்த பேராட்டத்தில் பண்டிகைக்காலங்களில் , தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பச் செல்லும் பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும், அவதிக்குள்ளாவார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டது. அத்தோடு இவ்வகையான காலங்களில் இப்படியான போராட்டங்கள் வருடம் தோறும் பிரான்சில் நடைபெற்றுக் கொண்டுமிருக்கிறது .

அத்துடன் கடந்த புதன் கிழமை , பிரன்ச் தொழிற்ச் சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதாக பிரன்ச் இரயில்வே கழகமும் அறிவித்தது .
ஆனால் ,நேற்று வியாழக் கிழமை திடீர் திருப்பமாக , ‘லா செ ழெ த்தே ஷெமினோ’ மற்றும் ‘சூயூத் ராய்’ என்ற இரு முக்கிய இரயில்வே தொழிற்ச் சங்கங்கள் தங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அறித்தன
தொழிற்சங்ககளின் வேலை நிறுத்த அறிவிப்பு திரும்பப் பெற்றதை  அறிந்த பிரன்ச் இரயில்வே கழகம் சற்று திருப்தியடைந்தபோதிலும், இன்று வெள்ளிக் கிழமை , பிரான்சின் இரயில்வே போக்குவரத்து பெரும் தாமதம் இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காரணம் , வியாழக்கிழமை பல இரயில்வே தொழிற்ச் சங்கங்களில் மிகத் தாமதமாக தங்களின் போராட்டங்களை வாபஸ் பெற்றதே என கூறப்படுகிறது.

ஆனால் , நாளை மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரான்சில் இரயில்வே போக்குவரத்து , மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என பிரன்ச் இரயில்வே கழகம் அறிவித்துள்ளது ,

அதேவேளை இரயில்வே பயணிகளுக்குபோராட்ட அறிப்பால் ஏற்பட்ட இழப்பிற்கு, தகுந்த இழப்பீடு மீளளிக்கப்படும் எனவும் பிரன்ச் இரயில்வே நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் எழுதுவது ; கமல்ராஜ்