இளந்தமிழே தாய்த்தமிழே

இளந்தமிழே என் தாய் தமிழே

ஆதியும் நீயே.. அந்தமும் நீயே..
அழகிய என் தாய் தமிழே…

ஆயிரம் மொழிகள் தோன்றினாலும்
அதற்கும் அன்னை நீயே…
என மகிழ்ந்திடுவோம் என் தொன்தமிழே!!!

அக்னி சுடர் போல் நீயே
எத்திசைப் பார்த்தாலும் உன் நிலை மாறா
என் தாய் தமிழே…

அருஞ்சுவையும் நீயே
அறுமருந்தும் நீயே- என
அற்புதங்கள் படைத்தாய் என் செந்தமிழே!!!

அண்டம் முழுதும் நீயே
கண்டம் பெயர்ந்து வாழும்-என்
அத்துனை தமிழ் உறவுகளை ஒன்றினைக்கும் என் தாய் தமிழே…

அங்கம் என உனை
சங்கம் பல வைத்து
போற்றிடச் செய்தாய் என் இன்தமிழே!!!

முக்கனி செந்தேன்- எனபல
இயற்கையின் அரிய படைப்பை அடைமொழி யாக்கிய
என் தாய் தமிழே…

சித்திரத்தில் நீ -பல சரித்திரத்தில் நீ
ஓவியத்தில் நீ – பல
காவியத்தில் நீ
வாக்கியத்தில் நீ – அனைவர் வாழ்க்கையில் நீ
சிலைகளில் நீ – பல
கலைகளில் நீ
என் நுண்தமிழே!!

அன்னை என்போர்க்கு அரவணைப்பு தந்தாய்
பெண்மை என்போர்க்கு ஆறுதல் தந்தாய்
என்றும் நன்நிலை மாறா-என்
தாய் தமிழே…

ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆண்டவர் பலர் மாய்ந்தாலும்
என்றும் இளமையோடு வாழும் என் இளந்தமிழே!!

தொன்மை முன்மை நுண்மை திண்மை

எண்மை ஒண்மை
இனிமை தனிமை

இளமை வளமை தாய்மை தூய்மை

மும்மை செம்மை இயன்மை வியன்மை
என்று பதினாறு செல்வங்களைப் பெற்று வளமோடு வாழ்வாய் – என் தீந்தமிழே!!!

எழுதுவது : கோ.மாலதி சுரேஷ் கோவை