கோல்கத்தா சேரியில் வாழும் சுல்தானா பேகம் தாஜ்மஹால் சட்டப்படி தனது உடமை என்று கோருகிறார்.

மொகலாயர்களின் அரசபரம்பரையின் கடைசி வாரிசு பகதூர் ஷா ஸபார் ஆகும். அவரது பேரனின், பேரனான மிர்ஸா முஹம்மது பதார் பக்த் தான் தனது கணவன் என்பதை நிரூபிக்கும் பத்திரங்களுடன் செங்கோட்டை உட்பட்ட மொகலாய அரச சொத்துக்களுக்கு உரிமை கோரிப் போராடி வருகிறார் சுல்தானா பேகம். 

தனது வக்கீலான விவேக் மூர் என்பவர் மூலம் ‘தான் எவ்வித வசதிகளுமின்றி கல்கத்தாவின் சேரியில் வாழ்ந்து வருவதாகவும், பிரிட்டிசார் தாக்கிப் பறித்தெடுத்த சொத்துக்களைத் தனக்கே உரித்தாக்கவேண்டும்,’ என்று தற்போது 68 வயதான சுல்தானா பேகம்.  

பகதூர் ஷா ஸபார் மொகலாய அரசுக்குப் பட்டமேறும்போது [1837] அது பெருமளவில் சுருங்கியிருந்தது. பிரிட்டிஷாரின் ஈஸ்ட் இந்தியா கொம்பனி அதன் பெரும்பாகத்தைக் கைப்பற்றியிருந்தது. அதையடுத்துப் படிப்படியாக மொகலாய வீரர்களும் கூடத் தமது அரசனுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். கடைசிக் கட்டப் போரில் ஸபாரை பிரிட்டிஷார் தோற்கடிக்க நிபந்தனையின்றி அரசைத் துறந்தார். ஆயினும், அவரது 10 பிள்ளைகளையும் பிரிட்டிஷார் கொன்றொழித்தனர்.

ஸபார் மாட்டுவண்டியில் பக்கத்து நாடான மியான்மாருக்குத் தப்பியோடி அங்கே சுமார் ஐந்து வருடங்கள் கழித்துக் கடும் ஏழ்மையில் இறந்தார். 

இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பின்னர் 1947 இல் ஜவர்கலால் நேரு செங்கோட்டையின் முக்கிய வாசலில் கொடியேற்றிக் கொண்டாடிய பின்னர் அவ்வழக்கம் தொடர்ந்தும் மற்றைய பிரதமர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசு தற்போது உரிமை கொண்டாடும் செங்கோட்டை உட்பட்டவை தனது சொத்துக்கள் என்று சுல்தானா பேகம் தனது வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார். வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் சுல்தானா பேகம் கடந்த 150 வருடங்களாக ஏன் மேற்கண்ட கோரிக்கையை, உரிமையைக் கொண்டாடவில்லை என்று கேள்விக்குறியெழுப்பி, “காலவிரயமானது,” என்று குறிப்பிட்டுத் தள்ளுப்டி செய்துவிட்டது.

சுல்தானா பேகத்தின் கையிலிருக்கும் உரிமைப்பட்டயங்களின் உண்மைத்தன்மை பற்றி நீதிமன்றம் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. வழக்கை மேன்முறையீடு செய்யவிருப்பதாக வழக்கறிஞர் விவேக் மூர் தெரிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்