அப்பா என்ற நம்பிக்கை

💫💫💫💫💫💫💫💫
அப்பா என்ற புத்தகத்தை புரட்டுவதில் ஏன் தாமதம்?

💫💫💫💫💫💫💫💫

தாகம் தீர்க்கும் தந்தை,
தாகத்திற்காக ஏங்கும் நிலை…

💫💫💫💫💫💫💫💫

தன் கடமையிலும் தவறாத தந்தை,
கோபத்தால் கடிந்த தந்தை…

💫💫💫💫💫💫💫💫

தந்தையின் இதயம்
வார்த்தைகளால் தாக்கியது விந்தை!

💫💫💫💫💫💫💫💫

அன்று முகத்தைப் பார்த்த தந்தை,
இன்று மௌனம் சாதிக்கும் நிலை!

💫💫💫💫💫💫💫💫

விழிகளின் ஊற்றாய் உதிரும் ஏக்கத்தின் தந்தையின் கண்ணீர்….

💫💫💫💫💫💫💫💫

அது பூமியில் விழுந்து மறைந்து போனது விட்டுக்கொடுத்த கண்ணீர்..

💫💫💫💫💫💫💫💫

அப்பா என்ற உறவு இருக்கும் போது தெரிவதில்லை!!
அப்பாற்பட்டு போனபிறகு வருந்தி பயனில்லை!!

💫💫💫💫💫💫💫💫


எழுதுவது : இளங்கவி. என் எஸ் இலட்சுமணன்.
கடாரம் மலேசியா.