180 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய கடல் டிராகனின் எலும்புக்கூடு பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்டது.

இதுவரை பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட இஷ்தியோசோர் எனப்படுக் கடல் டிராகன்களின் எலும்புக்கூடுகளில் மிக நீளமான ஒன்று ருத்லாண்ட் நீர்ப்பரப்புப் பாதுகாப்பு பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் பெப்ரவரியில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்த எலும்புக்கூட்டின் நீளம் சுமார் பத்து மீற்றர் ஆகும்.

இதே பிராந்தியத்தில் 1970 களில் இரண்டு சிறிய இஷ்தியோசோர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், 180 மில்லியன் வருடங்களுக்கு முந்தையது என்று குறிப்பிடப்படும் இந்த எலும்புக்கூட்டின் மொத்த எடை சுமார் ஒரு தொன் ஆகும். 

எலும்புக்கூடுகளின் மீது நடாத்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி இஷ்தியோசோர்கள் சுமார் 250 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் 90 மில்லியன் வருடங்கள் வரை பூமியில் வாழ்ந்திருக்கின்றன. ஊரும் ஜந்தாக இருந்த அவை பின்னர் கடல்வாழ் மிருகங்களாக மாறியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்