பேருந்துப் பயணம்
பாதையில் காலடி எடுத்து வைத்து /
படிகள் ஏறி பத்திரமாய் அமர்கின்றேன்/
பேரூந்தில் கையை கவனமாக மெல்ல /
மெல்ல ஜன்னலோர இருக்கையில் வைக்கின்றேன்.
பக்கத்தில் பாவையொருத்தி படபட /
வென பல்லித்து பாவமாய் பேச /
எத்தனித்தால் எதையும் அறியாத குழந்தையாய் /
யானும் மெதுவாய் வாய்திறந்து பேச/
அவளோ ஆயிரம் வடுக்களை அகத்தில் /
புதைத்து விதவையாய் ஏங்கி தவித்தவாளாய் /
கதை சொல்ல கண்களில் கண்ணீர் /
ஊற்றெடுக்க பேருந்து பயணம் முற்றுகையிட்டது.
எழுதுவது : பஹ்ரியா பாயிஸ்
இலங்கை