பேசுங்கள் அழகாக

பேசுங்கள் நிதானமாக
ஆனால் நீதியாக
பேசுங்கள்.

பேசுங்கள் கரிசனனையாக
ஆனால் கண்ட இடமெல்லாம் கரிசனையாக பேசாதீர்கள்.

பேசுங்கள் கலகலப்பாக ஆனால்
கண்டபடி பேசாதீர்கள்.

பேசுங்கள் அமைதியாக ஆனால்
அளவு கடந்து பேசாதீர்கள்.

பேசுங்கள் இனிமையாக ஆனால்
தேவைக்கு மட்டும் இனிமையாக பேசாதீர்கள்.

பேசுங்கள் உரத்து
ஆனால் உண்மையை மட்டும் பேசுங்கள்.

பேசுங்கள் நகைச்சுவையாக
ஆனால் நயவஞ்சகமில்லாமல்
பேசுங்கள்.

பேசுங்கள் தேவையானதை மட்டும் ஆனால்
தேவையில்லாத வையை ஒரு நாளும் யார் முன்னிலையில் பேசாதீர்கள்.

பேசுங்கள் மனங்களில் மகிழ்ச்சியை உருவாக்க.. ஆனால் யார் மனதையும் உடைக்க பேசாதீர்கள்.

பேசுங்கள் அடுத்தவருக்கு ஆறுதலிக்க ஆனால்
அடுத்தவர்களை படுகுழியில் போட
பேசாதீர்கள்.

பேசுங்கள் கண்ணியமாக ஆனால் கர்வத்துடன் பேசாதீர்கள்.

பேசுங்கள் இருக்கும் உறவையோ பொருளையோ பற்றி
ஆனால் இல்லாத உறவையோ , பிரிந்து போன உறவையோ , இழந்த பொருள்களையோ பற்றி பேசாதீர்கள்.

பஹ்ரியா பாயிஸ்
இலங்கை