தன்னம்பிக்கை சாதிக்கும்
சாதிக்க வேண்டும்
என்ற உறுதி
வாழ்ந்து காட்ட
வேண்டும் என்ற வைராக்கியம்!
வென்று காட்ட
என்ற
போராட்ட குணம்!
அடைவதற்கான
லட்சியத்தில்
ஒரு தீவிரம்!
வாய்ப்பு வராமல்
இருப்பினும்
அதை உருவாக்கும் திறமை!
உணவு, உறக்கம் இவற்றையும் ஒதுக்கி வைத்து உழைத்திடும் எண்ணம்!
எத்தனை தோல்விகள்
தடைகள் வந்தாலும் சமாளிக்கும் திறன்!
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை
எடுத்து வைத்து
சாதிக்கும் துணிச்சல்!
நம் தகுதிக்கும், திறமைக்கும் சரியான இடம் எங்கே
என்கிற தேடல்!
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துச் செல்லும் அடக்கம்!
விமர்சனங்களை
சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம்!
அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் மூளை!
நம் இலக்கை
அடையக்கூடிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தைச் செலவிடும் அக்கறை!
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுது போக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு!
நேற்றை விட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என அளந்து அறியும் ஆர்வம்!
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை!
இவை அத்தனையும்
இருப்பவர்கள்
தான் வாழ்க்கையில்
வெல்கிறார்கள்1
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
நல்ல எண்ணங்களும்
இருந்தாலே
வாழ்க்கை
நம் வசமாகும்!
எழுதுவது: விஜயலட்சுமி