வறுமையின் முற்றுப்புள்ளி
நொடிக்கவிதைகள்
தளிர்கள் துளிர்த்து விடுகின்றன..
தத்துவங்கள்
விழுந்து விடுவதால்.!
🌸🌸🌸🌸🌸🌸🌸
முகம் கொதிக்கும்
நண்பகல்..
தாகம் தீர்க்கவில்லை
கானல் நீர்.!
🌸🌸🌸🌸🌸🌸🌸
ஒரு இனிய குரல் பிசாசைப் போல
அலறுகிறது..
அலைபேசியின்
அதிர்வலை.!
🌸🌸🌸🌸🌸🌸🌸
முன்னும் பின்னுமாய்
யுகங்களாய்த்
தொடர்கிறது
ஊரடங்கு.!
🌸🌸🌸🌸🌸🌸🌸
ஒரு போதும் குறிப்புணர முடியவில்லை..
வறுமையின் முற்றுப் புள்ளிக்கு.!
எழுதுவது : ப.ஜார்ஜ்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸