அலையும் நானும்

கரையை  வந்து வந்து முத்தமிட்டு செல்லும் அலைபோல
உன் நினைவுகளும்
என்னுள் வந்து வந்து வந்து 
அலையைப் போல பெருகுகிறது

நீ இல்லாது போனாலும்
என் நினைவில் என்றும்  நீ
இருக்கிறாய் என்று அறைந்து சொல்கிறது என் மனது

அலையோடு கரையும் கலப்பதில்லை
என்னோடு நீயும் கலக்கவில்லை
என்றாவது ஒரு நாள் கலப்போம்
எனும் முயற்சியில் அலையும் நானும்…

எழுதுவது : நாகா ஆச்சி அம்மையார்