திட்டமிட்டபடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட நவீனரக தொலைநோக்கி அந்த இடத்தைச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தூரமான, பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தில் சூரியனின் ஈர்ப்புச்சக்தியின் சமநிலை இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
8 பில்லியன் பெறுமதியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் ஆரம்பகாலம் பற்றிய மேலதிக விபரங்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுக்கக்கூடிய படங்களை எடுக்கும் என்று நம்பப்படுகிறது. நாஸாவுடன் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்தத் தொலைநோக்கியை அனுப்பும் திட்டத்தில் பங்குபற்றியிருந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்