ஆபிரிக்கக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் புர்க்கினோ பாசோவை எதிரிட செனகல் தயார்.
பலமான ஆபிரிக்க நாடுகளின் அணிகளை வீழ்த்தி நடக்கும் ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பை மோதல்களில் சலசலப்பை உண்டாக்கிய ஈகுவடோரியல் கினியா அணியை 3-1 வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது அரையிறுதி மோதலுக்குச் சித்தியடைந்தது செனகலின் அணி. புர்க்கினோ பாசோவுக்கு எதிராக அரையிறுதியில் செனகல் மோதும்.
எதுவும் நடக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களின் எண்ணத்துக்கு எதிராக செனகலின் பமாரா டியேடு ஈகுவடோரியல் கினியாவுக்கெதிரான முதலாவது கோலைப் போட்டார். ஜனிக் புயிலாவின் ஒரேயொரு கோல் மட்டுமே ஈகுவடோரியல் கினியாவுக்குக் கிடைத்தது.
செக்கவு குயாட்டேயும், இஸ்மாயிலா சர்ரும் செனகலுக்காக மேலுமிரண்டு தடவை எதிரணியின் வலைக்குள் பந்தை போட்டார்கள். செனகலுக்கு எதிராக ஒரு தண்டனை ஒரு சந்தர்ப்பத்தில் நடுவரால் கொடுக்கப்பட்டது. ஆனால், நடந்தத்தைப் படத்தில் மீண்டும் பார்த்த நடுவர் தனது மனதை மாற்றிக்கொண்டார். எனவே ஈகுவடோரியல் கினியா அணியில் திறமையான ஆட்டத்தினால் செனகலை வெல்ல முடியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்