கணனி

எழுத்தாணியும்
காகிதமும்
மூளை முடுக்கில்
முனங்கிட

தொலை தூர
பேச்சொலி
மின்னல்களாக
செவிப்பறைக்கு
சொகுசாக

உலக மையம்
உள்ளங்கைகளில்
உழன்று உளவிடும்
உயிருக்கும் உயிராக

காதலுக்கு சமிக்ஞை தந்திடும் செல்லிடப் பேசி
காதல் அரங்கத்தின்
முதன்மையாக

பல உள்ளங்களை
பிரித்தும்
இணைத்தும் வைக்கும்
ஊடகம் பலருக்கும்
பாதகமாக
சாதகமாக
மனிதனுக்கு
இவை
இல்லையேல்
அவன் ஜடமாக

மொத்தத்தில்
ஆர்பாட்ட மற்ற
அறிவு கணனி
நல் வழி பயணிகளுக்கு
உற்ற தோழனாக
மாணவ மணிகளுக்கு
நல் ஆசானாக

மனிதனை
உயர்த்தி நிறுத்தும் குல சாமியாக
வீட்டுப் பெண்களுக்கு விடயமாக
வீனருக்கும் உபயமாக

இலக்கணத்துக்கு
மொழி பெயர்த்து
இதிகாசங்களை வாரி இறைத்து

கணனி வழி
சங்கத்
தமிழை வாழ வைக்கும்
குருவாக

சி.ம.அபிமாலா
மலேசியா