புதுமைப்பெண்

இளைய கன்னியின் எழிலைக் கண்டு
வளைய வந்தான் வாலிபன் ஒருவன்


கண்ணே மணியே கற்கண்டே என்றான்
பெண்ணே நீயே பேரின்பமென்றான்


ஒட்டிப் பேசி உறவை வளர்க்க
கிட்ட வந்தான் கெடுமதி யாளன்


தள்ளிப் போகும் தையலை நோக்கி
எள்ளி நகைத்தே ஏளனம் செய்தான்


பொறுத்துப் பார்த்தாள் போவான் என்றே
கிறுக்குப் பையன் கேட்பதா யில்லை


கற்ற தற்காப்புக் கலைகை கொடுத்தது
சுற்றி யடித்தாள் சுருண்டு வீழ்ந்தான்


கடமை கண்ணியம் கட்டுப் பாட்டை
உடைமை யாக்கி ஒழுகி வாழ்ந்தால்

மண்ணில் நீயும் மதிக்கப் படுவாய்
பெண்ணே உன்னைத் தேடி வருவளே!

எழுதுவது : சி.விஜயலட்சுமி கோவிந்
மலேசியா