உழவும் உழவனும்

உலகில் ஓர் உயிரைப் படைக்க
தந்தையும் தாயும் தேவை

அவ்வுயிரை உலகு உள்ளவரைக் காக்க
ஏர்பிடிக்கும் உழவன் தேவை

உழவன் ஒருவன் இல்லை யென்றால்
நாட்டில் உண்ண உணவேது

தன் வயிர் காயும் போதும்
பயிரைக் காய விட மாட்டான்

அவன் நிலத்தில் விட்ட வியர்வை
உரமாகி நெல்மணி ஆகிறது

இவ்வுலகம் விஞ்ஞானத்தில் சிறப்பு அடையினும்
பசியைப்போக்க உழவனாலே இயலும்

படைத்தவன் மட்டும் கடவுள் அல்ல
பிறர் பசிப்போக்குபவனும் கடவுள்தான் அவனே உழவன்.... இவ்வுலகின் இறைவன்..

ஏர்பிடிப்பவன் இல்லை எனில்
அழிந்திருக்கும் உலகு பட்டினியால் உழவன் வாழ்க!!! உழவுத்தொழில் ஓங்குக!!!

எழுதுவது : கோ.மாலதி சுரேஷ்
கோவை