அழவேணுமா? தாராளமாக அழுதுவிடுங்கள்

மன உளைச்சலுக்கு முதல் காரணமே நமது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அதை உள்ளே அடைத்து வைத்திருப்பது தான்.

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் நமது உணர்வுகளை ஏதோ ஒரு வகையில் வெளிக்காட்ட வேண்டும்.

காட்டப்படாத போதுதான் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

யாராக இருந்தாலும் உங்கள் உணர்வுகளை வெளிகாட்ட பழகிக்கொள்ளுங்கள்.

அழவேண்டுமா அழுங்கள் தாரளமாக அழுங்கள் .மனவிட்டு பேச வேண்டுமா நெருங்கிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்றைக்கு பலருக்கு பிரச்சினை,தான் தனது கவலையை சொல்ல தனக்கு யாருமில்லை என்பது.
இவ்வாறு கவலையை பகிர்ந்து கொள்ள யாருமில்லை என் நினைப்பவர்களா நீங்கள்? அதிலிருந்து மீண்டு வாழ்வை திருப்தியுடன் இலகுவாக்க பின்வரும் வழிகளை கையாண்டு பாருங்கள்..

👉உங்களுடன் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். அதாவது அடுத்தவர்களிடம் நீங்கள் உங்கள் கவலையை எவ்வாறு கூறுகிறீர்களோ அதேபோல கூறிக்கொள்ளுங்கள்

👉உங்கள் கவலை அணைத்தையும் ஒரு தாளில் எழுதுங்கள் எல்லா கவலையையும் எழுதுங்கள். அப்போது மனது சிறிதளவு திருப்தியாகும் அதன் பின்னர் அந்தளை கிழித்து வீசிவிடுங்கள்.

👉சிலருக்கு எழுதவும் தெரியாமல் இருக்கும் அவர்கள் வரையுங்கள் சித்திரமாகவோ இல்ல ஏதோ கிறுக்கல்கள் போன்றதாகவோ கிறிக்கி விடுங்கள்.

👉அதீக கவலை ஏற்படும் போது நன்றாக தூங்கி எழும்புங்கள் சிலருக்கு தூக்கமும் வாராது கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு தூங்கி எழும்புங்கள்..

👉இயற்கையை இரசியுங்கள் இயற்கை காற்று நீர் நிலைகள் , மீன்கள் , மிருகங்கள் பூக்கள் ,இலைகள் என்பவற்றை இரசியுங்கள்.

👉உங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுங்கள்.

உங்கள் உணர்வுகளை ஏதோ ஒரு வகையில் வெளிக்காட்டுங்கள்.
மாறாக அடக்கி வைக்க முயற்சிக்காதீர்கள்.

எழுதுவது : பஹ்ரியா பாயிஸ்,கொழும்பு இலங்கை