டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் என்ற இரண்டு குடியரசுகளை உக்ரேனுக்குள் ஏற்றுக்கொள்ள டூமா பிரேரணை.

ரஷ்யப் பாராளுமன்றத்தில் செவ்வாயன்று முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றான உக்ரேனின் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் 351 – 16 என்ற பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் இணைந்த பிரேரணையான  ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு உட்பட்ட மற்றைய அமைச்சுகளுக்கு அனுப்பி அதை நிறைவேற்றுவது எப்படியென்ற ஆலோசனைகளைக் கோருதல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தின் சபாநாயகரான வியாச்செஸ்லாவ் வொலோடின் அது பற்றிக் குறிப்பிடுகையில், “மின்ஸ்க் ஒப்பந்தத்தை உக்ரேன் மீறிவருகிறது. டொம்பாஸில் வாழும் எங்கள் சகோதரர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கவேண்டியது அவசியம்,” என்று குறிப்பிட்டு பாராளுமன்றத்தின் முடிவு ஜனாதிபதிக்கு உடனே அனுப்பிவைக்கப்பட்டு டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் குடியரசுகள் இரண்டையும் சுயமாக நிர்ணயம் செய்யும்  உரிமையுள்ள நாடுகள் என்று அங்கீகரிக்கும்படி வேண்டிக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்