வயது 100, ஒரே நிறுவனத்தில் 84 வருடங்களும் 9 நாட்களும் ஊழியம் செய்து கின்னஸ் சாதனை.

வோல்டர் ஓர்த்மான் பிரேசிலைச் சேர்ந்தவர். நூறு வயதைத் தாண்டிவிட்ட இவர் 2019 இல் ஒரேயொரு நிறுவனத்தில் தொடர்ந்து 81 வருடங்களும் 85 நாட்களும் ஊழியம் செய்து சாதனை புரிந்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அன்று தானே நிலை நாட்டிய அந்தச் சாதனையை தனது நூறு வயதைக் கடந்ததும் மீண்டும் உடைத்திருக்கிறார். இப்போது அவர் ஒரே நிறுவனத்தில் 84 வருடங்களும் 9 நாட்களும் தொடர்ந்து ஊழியம் செய்துவிட்டார்.

1938 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாந்த கத்தரீனா நகரிலிருக்கும் கப்பல் சேவை நிறுவனமொன்றில் தனது 15 வயதில் வேலைக்கமர்ந்தார் வோல்டர் ஒர்த்மான். அவருடைய ஆர்வத்தைக் கவனித்து நிறுவனம் அவருக்கு பதவிகளை உயர்த்திக் கொடுத்தது. தனது ஐம்பதாவது வயதில் அவர் விற்பனை மேலாளர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். 

கின்னஸ் விபரங்கள் அவர் இப்போதும் நல்ல உடல், மன ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அத்துடன் தினசரி தனது உடற்பயிற்சிகளைச் செய்தபின்னரே அவர் வேலைக்குப் போகிறார்.

“நான் நாளையைப் பற்றி அதிகமாகத் திட்டங்களெதுவும் போடுவதில்லை. நாளை இன்னொரு காலை விடியும். அப்போது நான் எழுந்து எனது உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு வேலைக்குப் போவேன். இன்றைய நாளைப்பற்றி நான் சிந்தித்துச் செயற்படுவதால் நாளை பற்றிச் சிந்திக்க அதிகமில்லை. இப்போது, இங்கே என்பதே முக்கியம். உற்சாகமாக வேலைக்குப் போங்கள்,” என்கிறார் வோல்டர் ஒர்த்மான்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *