ஈராக்கில் மணல் சூறாவளியால் தாக்கப்பட்டு 1,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனையை நாடினர்.

ஈராக்கின் மேற்குப் பிராந்தியமான அன்பார், பக்கத்திலிருக்கும் பக்தாத் உட்பட்ட 18 மாகாணங்கள் ஒரே மாதத்தில் ஏழாவது தடவையாக மணச் சூறாவளியை எதிர்கொண்டிருக்கின்றன. எனவே அப்பகுதிகளின் அதிகாரிகள் அங்கு வாழும் மக்களை வீட்டுக்கு வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள். 

அன்பார் பிராந்திய மருத்துவமனைகள் தங்களிடம் மருத்துவ சேவைக்காக 700 பேர் வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். பக்கத்து சலாவுதீன் பிராந்தியத்தில் 300 பேரும், பக்கத்து மாகாணங்களொவ்வொன்றிலும் ஆகக்குறைந்தது 100 பேருக்குக் குறையாமல் மருத்துவமனைகளை நாடியிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. அதி தீவிரமான மணல் சூறாவளியானது அவர்களின் சுவாசிக்கும் அங்கங்களின் செயற்பாடுகளைப் பாதித்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 கடந்த பல வருடங்களாகவே ஈராக்கில் மழைவீழ்ச்சி தொடர்ந்து குறைந்து வந்திருக்கிறது. அதேசமயம் வெப்பநிலை அதிகரிப்பும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. உலகளாவிய ரீதியில் பாதிக்கும் கால நிலை மாற்றங்களின் விளைவுகளை மோசமாகப் பாதிக்கும் நாடுகளிலொன்று ஈராக் ஆக இருக்கும் என்று காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். அங்கிருக்கும் நீர்நிலைகள் 2050 அளவில் 20 % ஆல் வற்றிவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *