அழிவின் விளிம்பில் மனிதம்
நவீன விஞ்ஞான வளர்ச்சி மேம்படவே
தொழில்நுட்பதால் நவீன இயந்திங்கள் உருவாகவே
உடலால் வியர்வை சிந்தி உழைத்த
மனிதன் வேலைகள் அற்று தினம்
நோயுற்று ஆரோக்கியம் குன்றி போனானே
கடலில் குப்பைகளை கூலங்களை எறிந்து
கடல் நீரினை நஞ்சு நீராக
மாற்றியதால் கடல் வாழ் உயிரினங்கள்
அழிந்து நாசமாகி கொண்டு இருப்பதாலே
மீனவ தொழில் மங்கி கொண்டுள்ளதாலே
புசிக்க மீன் இணங்கள் அற்றுபோகுதே
மரங்களை அழித்து நாசம் செய்வதாலே
காற்று மாசடைந்து நஞ்சாக போனதால்
உயிர்கள் ஆரோக்கியம் அற்று போகிறதே
விவசாய நிலங்கள் கட்டிடங்களாக உருவெடுத்திடவே
உணவு தட்டுப்பாடை எதிர் நோக்கி
அழிவின் விளிம்பிற்கு மனிதன் செல்கின்றானே
அழிவை நிறுத்தி ஆரோக்கியமாய் வாழுவார்களோ
எழுதுவது: ஜஸூரா ஜலீல்,
மலேசியா🇱🇷