அம்மா
அம்மா
உன் அன்பால் வரைந்த ஓவியம் நான்
இந்த குடும்பம் நீயே
இந்த குடும்பத்தின் ஆணி வேர்நீயே
உன் வியர்வையாலும் இரத்தத்தினாலும் தான்
இந்த குடும்பம் பலம் பெற்று இருக்கிறது
உனக்குள் நான் வாழ்ந்து இருந்தாலும்
உன்னுடன் வாழ்வதற்காக நான்
இந்த பூமியை வந்து அடைந்தேன்
என்னை பாதுகாப்பதற்கு அந்த இறைவனால்
அனுப்பப்பட்ட தேவதை நீ…
நீயின்றி நான் இல்லை
என் உயிரும் இல்லை
அம்மா
எழுதுவது
ப.இலக்கியா
இளங்கலை கணினி அறிவியல்
இரண்டாம் ஆண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்-6