தனது தேவைக்கான எண்ணெயை ரஷ்யாவிலிருந்து வாங்குவதை இரட்டிப்பாக்கியது சவூதி அரேபியா.
மேற்கு நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மீதாகப் போட்டிருக்கும் முடக்கங்களால் அவர்களிடமிருந்து எரிபொருளை வாங்குவதைப் பல நாடுகள் தவிர்க்கின்றன. அதே சமயம், சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் ரஷ்யாவிடமிருந்து முன்னரை விட அதிக அளவில் தமக்குத் தேவையான எரிபொருட்களை வாங்கிவருகின்றன.
கோடை கால வெப்பநிலையை எதிர்கொள்ள தனது நாட்டின் குளிர்மைப்படுத்தும் தொழில்நுட்பத்துக்குத் தேவையான எண்ணெயை ரஷ்யாவிலிருந்து வாங்கி வருகிறது சவூதி அரேபியா. சர்வதேசச் சந்தையில் தனது எண்ணெயை அதிக விலையில் விற்கும் சவூதி அரேபியா மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நடக்கும் காலாண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.
OPEC+ என்ற சர்வதேச பெற்றோலியத் தயாரிப்பாளர்களின் கூட்டணி நாடுகளின் அமைப்பில் சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் சேர்ந்தே இயங்குகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்