பிரிட்டிஷ் மகாராணியின் ஆரோக்கியம் கவலைக்கிடமாகியிருக்கிறது – பக்கிங்காம் அரண்மனை.
தான் மகுடம் சூடிய 70 வருட விழாவை இவ்வருடம் கொண்டாடிய பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நிலை கவலைக்கிடமாகியிருப்பதாக அவருடைய பிரத்தியேக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வழக்கமாக இப்படியான விடயங்களைப் பகிரங்கப்படுத்தாத பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அச்செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
தற்போது 96 வயதாகியிருக்கும் மகாராணி எலிசபெத் II பாரம்பரியப்படி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் புதிய அலுவலக ஆண்டை இவ்வருடம் ஆரம்பித்து வைக்கவில்லை. அதுபோன்ற உத்தியோகபூர்வமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும்படி கடந்த மாதங்களில் தனது மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். லண்டனில் தங்காமல் அவர் ஸ்கொட்லாண்டிலிருந்தும் தனது மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். செவ்வாயன்று புதிய பிரதமராக லிஸ் டுருஸ் பதவியேற்றபோதும் அது ஸ்கொட்லாந்திலேயே நடந்தது.
மகாராணி எலிசபெத் II இன் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே ஸ்கொட்லாந்தின் பால்மொரல் அரண்மனையில் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இதுவரை அங்கே வந்திருக்காதவர்கள் அங்கே வந்துகொண்டிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்