ஒக்ஸ்போர்ட் நகரின் 450 வருடச் சம்பிரதாயச் சின்னமொன்று கதவுகளை மூடுகிறது.

ஒக்ஸ்போர்ட் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள், விருந்தினர்கள் போன்றவர்களிடையே பிரபலமாக இருந்த The Lamb & Flag pub, உணவகம் கொவிட் 19 காலக் கட்டுப்பாடுகளிடையே நிலை நிற்க முடியாமல் மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அதன் உரிமையாளரான செண்ட் ஜோன்ஸ் கொலிஜ் தாம் அதை ஜனவரி 31 ம் திகதியுடன் மூடுவதாக அறிவிக்கிறார்கள்.

பிரபலமான அந்த உணவகம் அதன் சூழலுக்காகப் பிரபலமானது. 1566 இல் ஆரம்பிக்கப்பட்ட அந்த உணவகம் 1613 இல் தற்போதிருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கே கிடைக்கும் பல வித மதுவகைகளுக்கும் எதிர்ப்பக்கமாக வாசிக்கப்படும் மணிக்கூட்டுக்கும் அது பிரபலமானது. எழுத்தாளர்களான தோமஸ் ஹார்டி, சி.எஸ்.லூயிஸ் ஆகியோரும் மாஜி அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், மாஜி பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளெயர் போன்றவர்களும் அங்கே விஜயம் செய்திருக்கிறார்கள்.

தற்போதைய நிர்வாகத்தினர் 1997 ம் ஆண்டில் உணவகத்தைப் பொறுப்பெடுத்துக்கொண்ட பின்னர் அதன் இலாபத்திலிருந்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு உதவித்தொகைகள் வழங்கி வருகின்றது. அது மூடப்பட்டாலும் அவ்வுதவித்தொகைகள் கொடுக்கப்படுவது தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *