ரஷ்யா, தான் கைப்பற்றிய உக்ரேன் பிராந்தியங்களில் நடத்திய வாக்கெடுப்பை ஏற்க மறுக்கிறது கஸக்ஸ்தான்.
சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஸக்ஸ்தான் தலைவர் கசீம் ஸொமார்ட் தொகயேவ். உக்ரேனிடமிருந்து போரில் கைப்பற்றி ரஷ்யா தன்னுடையது என்று பிரகடனப்படுத்தும் பிராந்தியங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவர் பிரகடனம் செய்திருக்கிறார். அந்தப் பிராந்திய மக்களிடையே அவர்கள் யாருடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தி வருகிறது ரஷ்யா. போரில் கைப்பற்றப்பட்டு இன்னொரு நாட்டால் இணைத்துக்கொள்ளப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படலாகாது என்று சர்வதேசச் சட்டங்களும் குறிப்பிடுகின்றன
.
“ஒரு நாட்டின் பிராந்தியங்களில் வாழும் சகல மனிதர்களின் உரிமைகளையும், அவர்கள் மீது குறிப்பிட்ட நாடு கொண்டிருக்கும் இறையாண்மையையும் கஸக்ஸ்தான் மதிக்கிறது. வெவ்வேறு இன மக்கள் குறிப்பிட்ட நாட்டின் ஆட்சிக்குள் சகல உரிமைகளுடனும், அமைதிகாக வாழலாம் என்பதையே நாம் விரும்புகிறோம்,” என்கிறார் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஐபேக் ஸ்மாதியரோவ் குறிப்பிடுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறைகூவலில் குறிப்பிடப்பட்டது போலவே ரஷ்யா – உக்ரேன் போர் பற்றிய ஒரு தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்கிறார் ஜனாதிபதி கசீம் தொகையேவ். அதற்காக ஒன்றுசேர்ந்து இயங்க தான் தயாராக இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்