சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவற்றில், செய்தவைகள் போதுமானதாக இல்லை, என்கிறது இந்தியா.
ஐ.நா- வின் பொதுச்சபையில் சிறீலங்கா அரசு மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியபோது அதில் வாக்களிக்காமல் இருந்த நாடுகளில் ஒன்று இந்தியாவாகும். சிறீலங்கா அரசு நாட்டில் ஏற்பட்ட, தொடரும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு முன் நிறுத்தவேண்டும், சிறுபான்மை இனத்தினருடன் நல்லிணக்கம் ஏற்படுத்திக்கொள்ளவெண்டும் போன்ற கோரிக்கைகள் ஐ.நா வின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் கண்டறிந்து, சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சமாதானம் மற்றும் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகிய தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தியா இரண்டு அடிப்படைக் கொள்கைகளால் எப்போதும் வழிநடத்தப்படுகிறது. சிறீலங்கா அரசு அதுபற்றி கொறடுத்த உறுதிப்படி அரசியலமைப்புச் சட்டத்தின் 13 வது திருத்தத்தின்படி மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். அவ்விடயங்களில் சிறீலங்கா அரசு இதுவரை செய்திருப்பவை போதுமானதாக இல்லை என்று இந்தியா கருதுகிறது,” என்று ஐ.நா-வின் இந்தியாவின் பிரதிநிதியாக இருக்கும் மணி பண்டேய் குறிப்பிட்டார்.
2009 ம் ஆண்டுமுதல் சிறிலங்காவுக்கு நிவாரணங்கள், புனரமைப்பு உதவி வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு, மறு குடியேற்றம் ஆகியவை மூலம் இந்தியா உதவி வந்திருக்கிறது. கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளின்போதும் ஒப்பிடமுடியாத அளவில் உதவிகளை இந்தியா வழங்கியதாகவும் மணி பண்டேய் குறிப்பிட்டார்.
“அமைதியையும், சுபீட்சத்தையும் சிறீலங்காவில் உண்டாக்குவதும் ஈழத்தமிழர்களின் அமைதிக்கான இலங்கைத் தமிழர்களின் கண்ணியமான, நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்,” என்றும் மணி பண்டேய் சுட்டிக் காட்டினார்.
சாள்ஸ் ஜெ. போமன்