வல்லிபுர மாயவன் தேர்| சிறப்புடன் நிறைவேறியது
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர மாயவனின் தேர்த்திருவிழா உற்சவம் சிறப்பாக நடந்தேறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சக்கரத்தாழ்வார் தேரேறி வீதிவலம் வந்தார்.
கோவிட் பெருந்தொற்றுக்காலங்களால் கடந்த வருடங்களில் பக்தர் வரவில் எண்ணிக்கையில் வீழ்ச்சி பெற்றிருந்த காலங்கள் கடந்து இந்தவருடம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
இன்றைய தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து நாளை கடல் தீர்த்தமும் நாளை மறுதினம் கேணித்தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
சக்கரத்தாழ்வார் கடல் நோக்கி தீர்த்தமாட செல்லும்போதும் பெருமளவு மக்கள் வரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தவருடம் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் திருவிழாக் காலங்களில் பங்குபற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது