அரை நூற்றாண்டு காணாத பசி, பட்டினியை எதிர்நோக்கும் சோமாலியாவுக்கு உதவி கேட்கிறது ஐ.நா-சபை.
ஆபிரிக்காவின் விசனத்துக்குரிய மூலை என்றழைக்கப்படும் நாடுகளிலொன்றான சோமாலியா மோசமான பசி, பட்டினி நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அது வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற அடையாளங்களே தெரிவதாகவும் பாலர்களுடைய ஆரோக்கியம் பற்றிப் பேணும் (UNICEF) அமைப்பு எச்சரிக்கிறது.
சோமாலியில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை எதிர்கொள்ள 2 பில்லியன் டொலர் உதவியை ஐ.நா கோரியிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 44,000 குழந்தைகள் தமது பசிக்குத் தேவையான உணவு இல்லாத காரணத்தால் கடும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் UNICEF உதவி மையங்களில் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் பலர் அப்படியான உதவி நிலையங்களை அடைவதற்கே சில நாட்களுக்கு நடக்கவேண்டும். நிலைமை மோசமடைய முன்னர் உதவிகள் செய்யவும், உதவிக்கான சேவை நிலையங்களை அதிகப்படுத்தவும் உதவித்தொகை வேண்டுகிறது ஐ.நா.
சாள்ஸ் ஜெ. போமன்