இங்கிலாந்தின்  முதல் வெற்றி|    
தோற்றது ஆப்கானிஸ்தான் 

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின்  இன்னுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்றது. அதன்படி இங்கிலாந்து அணி தன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து  அணித் தலைவர்  ஆப்கானிஸ்தானை முதல் துடுப்பெடுத்தாட அழைத்தார்.  அதன்படி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19 . 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

113 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்கள் நிறைவில்  வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில் 10 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 5விக்கெட்டுக்களை கைப்பற்றிய சாம் குர்றான்(Sam Curran), போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *