Sunrisers Hyderabad அணியில் இணையும் வியாஸ்காந்த்| IPL 2024

இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தியன் பிரீமியர் லீக் 2024 – IPL2024 இன் எஞ்சிய போட்டிகளுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்  இணைக்கப்பட்டுள்ளார்.

Sunrisers Hyderabad அணியில் இதுவரை விளையாடி வந்த  இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க காயமடைந்த நிலையில், அவருக்குப்  பதிலாக 22 வயதான வியாஸ்காந்த் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குதிகால் காயம் காரணமாக ஹசரங்க உத்தியோகபூர்வமாக IPL போட்டிகளில்  முழுவதுமாக விலகவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து சர்வதேச லீக் t20  போட்டிகளில் அண்மைய காலங்களில் பிரகாசித்த
வியாஸ்காந்த் SRH அணுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்றிருந்த  சர்வதேச லீக் T20 (ILT20) இல் MI எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி அவரின் சுழற்பந்து உலகளவில் பேசப்பட்டிருந்தது.

அதேபோலவே வியாஸ்காந்த், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் போட்டிகளிலும் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணியை  பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *