அயர்லாந்தின் புதிய பிரதமாராக சைமன் ஹரிஸ்

அயா்லாந்தின் புதிய பிரதமராக 37 வயதுடைய சைமன் ஹரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

அயர்லாந்தில் இதுவரை  பிரதமராக இருந்தவர்  இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் ஆவார்.
இவர்  கடந்த மாதம் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து பிரதமர் பதவிக்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.
நடைபெற்ற வாக்கெடுப்பில் 19 வாக்குகள் மேலதிகமாக ஆதரவைப்பெற்று சைமன் ஹரிஸ் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடைபெற்ற வாக்கெடுப்பில்  ஹரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *