Royal challengers க்கு இன்று இரண்டாவது வெற்றி|Sunrisers Hyderabad எதிர்பாராத தோல்வி

IPL தொடரின் 41 போட்டியில் Royal Challengers Bangaluru அணி தனது இரண்டாவது வெற்றியைப்பதிவு செய்துள்ளது. அணிகளின் புள்ளிகள் பட்டியலில் முன்னோடியாக இருக்கும் Sunrisers Hyderabad அணியை 35 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணயசைசுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது.
ஆட்டத்தில் Virat Kohli,  Rajat Patidar ஆகியோர் ஆகியோர் 50 ஓட்டங்களை எடுத்தனர். குறிப்பாக Rajat Patidar இருபது பந்துகளில் 50 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துக்கொண்டது.
அந்தவகையில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி இந்தப்போட்டியில் தோல்வியைத்தழுவியது.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக  அதிரடியாக 50 ஓட்டங்களைக்குவித்த Rajat Patidar தெரிவானார்.


இந்தப்போட்டித்தொடரில் 10 வது இடத்தில் இருக்கும் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களூர் அணி, தனது இரண்டாவது வெற்றியாக, முன்னோடியாக இருக்கும் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *