கடைசி ஓவரில் லக்னோ வென்றது | இன்றும் மும்பை தோல்வி

IPL தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை 4 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுக்களால் வென்றது.

Ekana Sports City மைதானத்தில் நடைபெற்ற IPL இன் 48 வது போட்டியில் இந்த வெற்றியை லக்னோ அணி பதிவுசெய்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Lucknow அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய Mumbai Indians அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
ஆட்டத்தில் ஆகக்கூடுதலாக Nehal Wadhera,  41 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்த Lucknow Super Giants அணி, ஆரம்ப ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தும், ஓட்டங்களை வேகமாக எடுக்க தடுமாறியிருந்தாலும், நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியிருந்தது. ஆட்டத்தில் அதிகபட்சமாக Marcus Stoinis, 45 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்திருந்தார். பந்துவீச்சிலும் 1 விக்கெட்டை எடுத்த Marcus Stoinis ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியோடு லக்னோ அணி அணித்தரவரிசையில் 3 ம் இடத்துக்கு முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *