ராஜஸ்தான் ரோயல் இன்று தோற்றது| டெல்கி 20 ஓட்டங்களால் வெற்றி

IPL தொடரின் 56 வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணி 20 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது. டெல்கி கப்பிற்றல்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயலை வீழ்த்தி அணித்தர வரிசையிலும் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Arun Jetley மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் , டெல்கி அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.


அதன்படி துடுப்பெடுத்தாடிய டெல்கி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் , 8 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை எடுத்தது.
ஆட்டத்தில் Abishek Porel  36 பந்துகளில் 65 ஓட்டங்களையும், Jake Fraser-McGurk 20 பந்துகளில் 50 ஓட்டங்களையும் குவித்தனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல் , 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
ஆட்டத்தில் ஆகக்கூடுதலாக Sanju Samson, 46 பந்துகளில் 86 ஓட்டங்களைக்குவித்திருந்தார்.


இருந்தாலும் களத்தடுப்பில் சிறப்பாக டெல்கி அணி அசத்தியது.
ஆட்டத்தில் பந்துவீச்சில் 4 ஓவர்களும் பந்து வீசி 25 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய குல்டீப் யாதேவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *