பொறிஸ் அடுத்த பிரமருக்காக போட்டியிடமாட்டாராம் |இது சரியான செயலில்லை என்கிறார்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை விரைவில் தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் தலைமைக்கான தேர்தலில் தன்னை ஈடுபடுத்தப்போவதில்லை என முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோண்சன் அறிவித்துள்ளார்.
தனக்கு போதுமான ஆதரவு இருப்பதாக தெரிவித்த பொறிஸ், ஆனால் தலைமைப்பதவிக்கு போட்டியிடுவது சரியில்லை என அதிலிருந்து விலக்கிங்கொள்வதாக அறிவித்துள்ளார்.
57 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வெளிப்படையான ஆதரவை பொறிஸ் ஜோன்சனுக்கு வழங்குவதாக தெரிவகத்திருப்பினும் 102 பேர் தனக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டதனால் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
2024ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்க கட்சித்தலைமையாக நல்லதோர் முன்னேற்றகரமான சூழலை தன்னால் அமைத்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்ட அவர் , கட்சித்தலைமைக்கு போட்டியிடுவது சரியான நேரமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித்தலைமைக்காகவும் அடுத்த பிரித்தானிய பிரதமராகவும் போட்டியிடும் களத்தில் ரிசி சுனக் தற்போது இருக்கிறார்.
இந்தப்போட்டியில் வர எதிர்பார்க்கப்பட்ட பென்னி மோர்டாண்ட் , இதுவரை 100 எம்பிக்களின் ஆதரவை இதுவரை உறுதிப்படுத்தவில்லை . திங்கட்கிழமை வரை அதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதா என்பது பற்றி இதுவரை சாதகமான முடிவுகள் அவர் சார்பில் கிட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கியர் ஸ்ராமர் பொதுத்தேர்தலை விரைவில் நடாத்த வேண்டும் எனக்கேட்கும் அதேவேளை ,கொன்சர்வேட்டிவ் தலைமையூடாக வரும் எந்த ஒரு அரசாங்கமும் பிரிட்டனுக்கு இனி உதவாது, அது குழப்பமாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.