இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து |T20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண குழு 1இல் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியை D/L அடிப்படையில் 5ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மழை வந்து குறுக்கிட்டதால் D/L அடிப்படையில் வெற்றி தீர்மானிக்க இங்கிலாந்துக்கு 5ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையானது. அதன்படி அயர்லாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைக் குவித்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் இருந்தபோது மழை வந்து குறுக்கிட்டது. அவ்வேளையில் 105 ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இருப்பினும் வெற்றியைத்தீர்மானிக்க வேண்டிய பின்னணியில் D/L முறையின் படி இங்கிலாந்து வெற்றிக்கு 111 ஓட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி அயர்லாந்து அணி தன் முதல் வெற்றியைப்பதிவு செய்தது குழுவில் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
போட்டியின் ஆட்டநாயகனாக அயர்லாந்து அணியில் 47 பந்துகளுக்கு 62 ஓட்டங்களைக்குவித்த Andy Balbirne அறிவிக்கப்பட்டார்.