யூனியன் Under 19 எதிர் ஞானம்ஸ்|வென்றது ஞானம்ஸ்

யாழ்ப்பாண துடுப்பாட்ட சங்க மேற்பார்வையில் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற , தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 19 வயதுக்குக்கீழ் அணியினர் உடனான போட்டியில் வடமராட்சி ஞானம்ஸ் கழக அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.கடந்த 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தப்போட்டி இடம்பெற்றிருந்தது.

இலங்கை கிரிக்கெட் சபையின் மத்தியஸ்தர்கள் கடமையாற்றிய மூன்றாவது போட்டியாக இடம்பெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் ஞானம்ஸ் அணி வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து களத்தடுப்பை தீர்மானித்து களமிறங்கிய ஞானம்ஸ் அணி மள மளவென விக்கெட்டுக்களை எடுத்துக்கொண்டது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 25.2 ஓவர்களில் 58 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.ஞானம்ஸ் அணியின் தலைவர் சிவரூபன் 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் அணி 9.3 ஓவர்களில் 1 விக்கெட்டை.மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றியைப்பதிவு செய்தது.

ஞானம்ஸ் அணியின் சார்பில் ஜொனி மற்றும் தினேஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் முறையே 26 ,18 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கு முன்னதாக ஞானம்ஸ் அணி, சிறீ காமாட்சி அணியுடனான முதலாவது போட்டியில் வெற்றியும், கிளிநொச்சி யுனைட்டட் அணியுடனான போட்டியில் தோல்வியும் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.