இந்தியா வெற்றி |நெதர்லாந்து தோல்வி |T20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண இன்றைய குழு 2 இன் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 9விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
அதன்படி இந்திய அணி இன்னுமோர் வெற்றியைப்பதிவுசெய்து குழு இரண்டில் 4 புள்ளிகளோடு முன்னிலை பெறுகிறது.
போட்டியின் ஆட்டநாயகனாக 25 பந்துகளில் 51 ஓட்டங்களைக்குவித்த சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
இதைவிட அணித்தலைவர் ரோகிட் சர்மா,விராட்கோலி ஆகியோர் தலா 53 மற்றும் 62 ஓட்டங்களைப்பெறறிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.