மன்னர் சாள்ஸின் உருவம் பொறிக்கப்படும் முதல் நாணயம்
பிரித்தானிய மன்னர் சாள்ஸ் அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தின் உற்பத்தி துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது புழக்கத்தில் நுழைய முதல் நாணயத்தின் உற்பத்தி என குறிப்பிடப்படுகிறது.
50 பென்ஸ் நாணயமான இது பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள The Royal Mint இல் அடிக்கத் தொடங்கப்பட்ட்ள்ளது, அத்துடன் பொதுமக்கள் பாவனைக்கு கூடியவில் டிசம்பரில் வந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது.
மன்னர் சாள்ஸின் உருவப்படத்தை உருவாக்கிய சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ், நாணயம் தயாரிக்கப்படுவது “தனக்கு கிடைத்த மிகவும் மறக்கமுடியாத குறிப்பிடத்தக்க அனுபவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.