வென்றது பாகிஸ்தான்|தென்னாபிரிக்காவின் முதற்தோல்வி|T20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண குழுநிலை இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியை பாகிஸ்தான் 33 ஓட்டங்களால் வென்றது.
பலமான அணியாக எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி இந்தத்தொடரில் முதற்தோல்வியைச் சந்தித்தது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 185 குவித்தது.
துடுப்பெடுத்தாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் Sadab Khan 22 பந்துகளில் அபாரமாகக் குவித்த 52 ஓட்டங்கள் மற்றும் Iftikar Ahamod 35 பந்துகளில் குவித்த 50 ஓட்டங்களும் ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கைகள் ஆகும்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுக்களை விரைவாக இழந்து தடுமாறியிருந்தாலும் தம்மை நிலைப்படுத்தும் ஆட்டத்தை தொடர்ந்தது.
இருப்பினும் மழைவந்து குறுக்கிட தென்னாபிரிக்க அணிக்கான வெற்றி இலக்கு, 14 ஓவர்களில் 142 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து விரைவாக ஓட்டங்களை அடித்து விளையாட வேண்டிய தென்னாபிரிக்கா மள மள என விக்கெட்டுக்களையும் இழந்து நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் Shaaheen shah afridi 3 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
அத்துடன் Shadab Khan 2 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி துடுப்பெடுத்தாட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன்படி பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தன்னை மூன்றாம் நிலையிலும் தென்னாபிரிக்க அணி இரண்டாம் நிலையிலும் தக்கவைத்திருக்கிறன என்பது குறிப்பிடத்தக்கது.