இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான்|அரையிறுதியில் தோற்றது நியூசிலாந்து |t20 உலகக்கிண்ணம்
T20 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பலமான அணியாக தொடர்ச்சியாக தன்னை நிலைப்படுத்தி வந்த நியூசிலாந்து துரதிஸ்டமாக தோற்று அரையிறுதிப்போட்டியுடன் வெளியேறியது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது
அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 152 ஓட்டங்களைக் குவித்தது.
அணித்தலைவர் வில்லியம்சன் எடுத்த 42 பந்துகளில் 46 ஓட்டங்களும் D Mitchel 35 பந்துகளில் குவித்த 53 ஓட்டங்களும் நியூசிலாந்து சார்பில் எடுத்த ஆகக்கூடிய ஓட்டங்கள் ஆகும்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் நின்று நிலைத்தாடிய ஆட்டத்தால் 5 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 153 எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் சென்றது.
பாகிஸ்தான் அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரிஸ்வான் 43 பந்துகளில் எடுத்த 57 ஓட்டங்களும் அணித்தலைவர் பாபர் அஸாம் 42 பந்துகளில் எடுத்த 52 ஓட்டங்களும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக mohamod Rizwan அறிவிக்கப்பட்டார்
இதன்படி நாளை நடைபெறும் அரையிறுதிப்போட்டியான இந்தியா எதிர் இங்கிலாந்து போட்டியில் வெற்றிபெறும் அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் ஞாயிறன்று மெல்போனில் மோதவுள்ளது.
மூன்றாவது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் பலமான அணியான முதல் அணியாக பாகிஸ்தான் ஏற்கனவே ஒருதடவை இங்கிலாந்து மண்ணில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.