ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது புதிய விண்வெளிப் பயணிகளை அறிமுகம் செய்தது.

20,000 பேர் விண்ணப்பங்களை அனுப்பியதிலிருந்து ஆறு பேர் விண்வெளிக்குப் பயணம் செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி [ESA] மையத்தால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நால்வர் ஆண்கள் இருவர் பெண்கள். அவர்களைத் தவிர மேலும் பதினொரு பேர் மேலதிகமாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் ஆறு பேரில் எவராவது பயணிக்க முடியாமல் போனால் அவ்விடத்தை நிரப்புவதற்காக.

தெரிந்தெடுக்கப்பட்ட நான்கு ஆண்களில் ஒருவர் உடல் ஊனமடைந்தவராகும். முதல் தடவையாக அப்படியான ஒருவரையும் ஐ.வி.ஆ மையம் விண்வெளிப் பயணத்துக்கு அனுப்பவிருக்கிறது. அவர் ஜோன் மக்வால் [John McFall] என்ற பிரிட்டிஷ்காரராகும். அவர் தனது 19 வயதில் இரண்டு சக்கர மோட்டார் வண்டி விபத்தொன்றில் மாட்டிக்கொண்டதால் கால் ஒன்றை இழந்தவர். ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தயங்களில் பங்குபற்றுபவர்.

ஐந்து விண்வெளிப் பயணிகள் பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம், பிரிட்டன், சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாகும். அந்த அமைப்பை நிர்வகிக்கும் 25 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதற்காகக் கடந்த பெப்ரவரியில் விண்ணப்பித்திருந்தார்கள். அதன் பின்னர் விண்வெளிப் பயணத்துக்கான தகமைப் பரிசீலனைகள் பல அவர்களிடையே நடாத்தப்பட்டது. 

ஊனமுற்றவர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விண்வெளிப் பயணங்களில் அவர்களுக்காக எவ்வாறான மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்று ஆராயப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *