போன பத்து மாதத்தில் மட்டும் வெளிநாட்டுக்கு போனவர்கள் இரண்டரை இலட்சத்துக்கும் மேல்| சிறீலங்காவின் அபாய நிலை
நாட்டின் பொருளாதார சீர்கெட்ட நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கொன்றன.
குறித்த தகவலை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள குறித்த அறிக்கையின்படி, கடந்த 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் மட்டும் 250 000 க்கும் அதிகமானோர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர் என்று குறிப்பிடுகிறது.
முன்னைய காலங்களில் வருடா வருடம் தொழில்நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது ஒரு பாரிய சடுதியான அதிகரிப்பு என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் , கடந்த 2022 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 28000 க்கும் அதிகமானோர் தொழிலுக்காக வெளிநாடு போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 11,399 திறனற்ற தொழிலாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் குறித்த அறிக்கை , 7,887 பேர் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 6,165 பேர் உள்நாட்டு சேவைகளுக்காக சென்றுள்ளனர் என்பதையும் மேலும் கோடிட்டுக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.