சினிமா விமர்சகர்களின் விருது விழாவில் “சிறந்த அன்னிய நாட்டுச் சினிமா” விருது பெற்றது ஆர்.ஆர்.ஆர்.

2023 ம் ஆண்டுக்கான சர்வதேச கோல்டன் குளோப் விழாவில் 2022 இன் சினிமாவில் அசல் தன்மையுள்ள இசைப்படைப்பு என்ற விருதைத் “RRR” சினிமாவின் “நாட்டு நாட்டு ….” பாடலின் விருது வேட்டை முடியவில்லை. லாஸ் ஏன் ஜல்சில் ஞாயிறன்று நடந்த Critics Choice Association விருதுகள் விழாவிலும் சிறந்த அன்னிய மொழிப் பாடல் என்ற வரிசையில் வெற்றியைத் தட்டிக்கொண்டது. அது மட்டுமன்றி ஆர்.ஆர்.ஆர் “சிறந்த அன்னிய நாட்டுச் சினிமா” விருதைத் தட்டிக்கொண்டது.   

சிறந்த அன்னிய மொழிப் படைப்புக்கள் வரிசையில் “All Quiet on the Western Front”, “Argentina 1985”, “Bardo”, “False Chronicle of a Handful of Truths”, “Close”,  “Decision to Leave” ஆகிய சினிமாக்கள் ஆர்.ஆர்.ஆர் உடன் போட்டியிட்டிருந்தன. சிறந்த சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த அன்னிய மொழிப்படைப்பு, சிறந்த காட்சியமைப்புகள், சிறந்த பாடல் ஆகியவைகளுக்கான விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் போட்டியிட்டிருந்தது.

சிறந்த சினிமாவுக்காகத் தனது படைப்பு பரிசு பெற்றதைப் பற்றிக் குறிப்பிட்ட அதன் இயக்குனர் ராஜமௌலி அதைத் தனது தாய்நாட்டுக்கும், தனது கற்பனைத் திறனை வளர்த்த தாயார், மற்றும் தனது வாழ்வில் சந்தித்த பெண்களுக்கும் அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“எனது அம்மா ராஜநந்தினி மற்றும் என் வாழ்வில் சந்தித்த எல்லாப் பெண்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். எனது கற்பனைத் திறனை வளர்த்து ஊக்குவித்தவர் என் அம்மாதான். படிப்பை மட்டும் கொண்டாடுவது அளவுக்கதிகமானது என்று சொன்ன அவர் கதைப்புத்தகங்களையும், சித்திரக்கதைகளைகளையும் வாசிக்கும்படி என்னைத் தூண்டினார்,” என்று குறிப்பிட்டார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

சினிமா விமர்சகர்கள் விருதுகளைப் பெற்ற படைப்புக்கள் Academy Award பெறக்கூடியவைகள் எவையென்பதைக் கோடிட்டுக் காட்டுபவையாகும். வரவிருக்கும் ஒஸ்கார் விருது உட்பட்ட சர்வதேச விருதுகளிலும் ஆர்.ஆர்.ஆர் சினிமா வெவ்வேறு விருதுகளை பெறலாம் என்ற கருத்து பல பொழுதுபோக்கு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *