“முலைக்காம்புகளுக்கு விடுதலை கொடுங்கள்,” என்று பரிந்துரை செய்தது பேஸ்புக் கண்காணிப்புக் குழு.
பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பெண்களின் முலைகளைக் காட்டுவதைத் தடுத்து வைத்திருப்பது கருத்துரிமையை முடக்கும் ஒரு நடவடிக்கை என்கிறது மெத்தா நிறுவனத்தின் கண்காணிப்புக்குழு. சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக அதற்கான ஒரு போராட்டம் “Free the Nipple” என்ற பெயரில் இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கல்வித்துறையில் வல்லுனர்கள், மனித உரிமை அமைப்பினர் மற்றும் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய குழுவானது தனது உள்ளடக்க-மதிப்பீட்டுக் கொள்கைகள் குறித்து நிறுவனத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது. நிலவிவரும் தடையானது இணையத் தளங்களிலிருந்து குறிப்பாக பெண்கள், ஒருபால் சேர்க்கையாளர், மற்றும் திருநங்கைகளை ஒதுக்கிவைக்கிறது என்று அக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறது.
மெத்தா நிறுவனம் தனது “வயதுவந்தோரின் நிர்வாணம் தடை” கோட்பாட்டின் மூலம் திறந்த மார்பைக் காட்டும் படங்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணாக இருப்பினும் தடை செய்து வருகிறது. அதை எதிர்த்துச் செய்யப்பட்ட புகாரை விசாரித்த அக்குழு மெத்தா நிறுவனம் சர்வதேச மனித உரிமைகளுக்கு ஒவ்வான கோட்பாடுகளைத் தெளிவாக வெளியிட்டுப் பின்பற்றவேண்டும் என்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்