ஒரு தொன் குண்டைக் காவிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் போடக்கூடிய காற்றாடி விமானத்தை இஸ்ராயேல் தயாரித்திருக்கிறது.
எங்கெங்கோ இருக்கும் இடங்களுக்கு ஒரு தொன் பாரமுள்ள குண்டைக் காவிச்சென்று குறிபார்த்து எறிந்துவிடக்கூடிய காற்றாடி விமானங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ராயேல் கண்டுபிடித்திருக்கிறது. அக்குண்டுகள் புகைக்காமல், சத்தமே இல்லாமல் பயணித்துத் தாக்கக்கூடியவை. இரகசியமாக வைத்திருக்கும் அந்த வானூர்திகள் மூலம் தமது பிராந்தியத்தில் இஸ்ராயேல் தாக்கியிருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
குண்டுகளைக் காவிச்சென்று குறிபார்த்துத் தாக்கும் காற்றாடி விமானங்கள் பல நாடுகளாலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அப்படியானவற்றில் மிக அதிக பாரமுள்ள குண்டுகளைத் தாங்கும் காற்றாடி விமானங்கள் இஸ்ராயேலால் தயாரிக்கப்பட்டிருப்பவையே ஆகும். அவ்விபரங்களை பெயரை வெளிப்படுத்தாத ஒரு இஸ்ராயேல் அதிகாரி வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பிட்ட காற்றாடி விமானம் ஒரு பயணிகள் விமானம் போன்ற அளவுள்ளது என்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்